அம்பாறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி

அம்பாறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரி படுகொலையினை சித்திரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை வீரமுனையில் படுகொலை செய்யப்பட்டமக்களின் நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்தது .

மே 18 முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 14ஆவது நினைவேந்தலையிட்டு தமிழின படுகொலைக்கான நீதி கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் இனப் படுகொலையை சித்தி ரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி அம்பாறை வீரமுனை கோவிலில் 1990 ஆம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவுத் தூபியில் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்து ஊர்தி பவனியை ஆரம்பித்தனர்.

இந்த ஊர்தி பவனி அங்கிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபிக்கு சென்று அங்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி அதனை தொடர்ந்து மட்டு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபிக்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி செங்கலடி வாழைச்சேனை ஊடாக வாகரையை சென்று அங்கிருந்து இன்று திருகோணமலையை சென்றடையவுள்ளது.

இந்த ஊர்தி பவனி இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் தமிழின படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை நினைவு தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடைய வுள்ளது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )