ஜனாதிபதியை சந்திக்கிறார் இரா. சம்பந்தன்: இன்று தீர்மானம் மிக்க கலந்துரையாடல் !

ஜனாதிபதியை சந்திக்கிறார் இரா. சம்பந்தன்: இன்று தீர்மானம் மிக்க கலந்துரையாடல் !

ஜனாதிபதியுடன் இன்று நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார்.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும் நாட்டுக்குள்ளேயும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது.

அந்த அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை.

இதன் அடிப்படையில்தான் இன்று ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என்று இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )