
புலம்பெயர் தமிழர்களுக்கு ரணில் வழங்கியுள்ள உறுதி மொழி.!
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில், அக்கறையாக உள்ளதாகவும் தமிழ் காட்சிகளுடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னருடைய முடி சூட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், தமிழ் புத்திஜீவிகளின் இரவு விருந்திலும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருவதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் காட்சிகளுடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் இடம்பெற உள்ள நிலையில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாகவும் தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

