
இலங்கையருக்கு 250 மி. டொலர் இலஞ்சம் நீதியமைச்சர் விஜயதாஸ கூறியது உண்மையா?
நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை தடுப்பதற்கு சாமர குணசேகர என்ற இலங்கையருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச முன்வைத்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை முதலில் ஆராயப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிரணி எம்.பி.யான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாவலவிலுள்ள சுதந்திர மக்கள் சபைஅலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி மூழ்கிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு குறித்த கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலர் நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் என துறை நிபுணர்கள் நீதியமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசு கூறுகின்றது
அண்ணல் நஷ்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை தடுப்பதற்கு சாமர குணசேகர என்ற இலங்கையருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,பிரித்தானிய நாட்டு வங்கி கணக்கில் அந்த நிதி வைப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
.பிரிட்டன் வங்கி கட்டமைப்பில் நிதி தூய்மைப்படுத்தல் சட்டம் கடுமையாக பின்னப்பற்றடும்.ஆகவே தனி நபர் ஒருவரின் கணக்கில் 250 மில்லியன் டொலரை வைப்பிடும் போது பிரிட்டன் வங்கி கட்டமைப்பு விசேட கவனம் செலுத்தும்.ஆகவே நீதி அமைச்சரின் இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை முதலில் ஆராயப்பட வேண்டும்.
ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது ஒருநாள் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற தெரிவு குழு ஒன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளோம் .அதன் மூலமே உண்மைத்தன்மைகளை கண்டறிய முடியும் என்றார்.

