மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்.மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளதால் தேவையாயின் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்

பொர ளை கெம்பல் மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுப்போம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சகல தொழிற்சங்கங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் தொழிற்சங்கத்தினரை தவறாக வழிநடத்துகிறார்கள்.எம்மை திருடர்,திருடர் என விமர்சிப்பவர்களின் பின்னணியை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சவால்களை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தோம்.அப்போது எவரும் முன்வரவில்லை.

இலங்கையின் தேசியத்தை இல்லாதொழிக்க முன்னர் சர்வதேச சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதற்கு பல விடயங்கள் சான்றுகளாகவுள்ளன. மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றவும்,மக்களுக்காக ஆட்சியை விட்டுக் கொடுக்கவும் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும்.பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம்.மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளதால் தேவையாயின் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )