ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. சிறிய மைதானங்களில் மேதினத்தை நடத்துவது ஏன்?

ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. சிறிய மைதானங்களில் மேதினத்தை நடத்துவது ஏன்?

மக்களுக்கு நெருக்கடி இருக்கும் வரைக்குமே இவர்களுக்கு மக்கள் முன் செல்லமுடியும்.தற்போது நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளநிலையில் இவர்களினால் மக்கள் முன் செல்ல முடியவில்லை. அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே .வி.பி.யும் சிறிய மைதானங்களில் மே தினத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியாய் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தாங்களே ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும், தெரிவித்து வந்தது. தற்போது நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கு ஆதரவளிக்காமல் பாராளுமன்றத்தில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அவர்கள் ஒளித்துகொண்டனர். அரசியல் பொறாமையே இதற்கு காரணம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அரசாங்கத்துக்கு கிடைக்காது என்றே இவர்கள் நம்பி இருந்தனர். அதனாலே நாணய நிதியத்துக்கு செல்லுமாறு தெரிவித்து வந்தனர். தற்போது நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பின்னர், மக்களின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

மக்களுக்கு நெருக்கடி இருக்கும் வரைக்குமே இவர்களுக்கு மக்கள் முன் செல்லமுடியும். அரசியல் செய்ய முடியும். அதனால் இவர்களின் திட்டங்கள் தற்போது படிப்படியாக தோல்விடைந்து வருகின்றன. அதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி இடம்பெற இருக்கும் மேதின கூட்டத்தையும் வழமையாக அதிக மக்கள் கலந்துகொள்ள முடியுமான இடத்தில் நடத்தாமல், கொழும் பில் ஏ.ஈ.குணசிங்க என்ற சிறிய மைதானத்தில் நடத்த தீர்மானித்திருக்கிறது.

அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியின் செல்வாக்கும் குறைந்து வருகிறது. அதனால் அவர்களும் சிறியதொரு இடத்திலேயே மேதின கூட்டத்தை நடத்த இருக்கிறனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )