தேசிய வேட்பாளராக ரணில் களமிறங்குவார்; வெற்றிபெறுவதும் உறுதி

தேசிய வேட்பாளராக ரணில் களமிறங்குவார்; வெற்றிபெறுவதும் உறுதி

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதும். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றிபெறுவதும் உறுதி என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலி த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியாய் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்இடம்பெறும் .அதில் ரணில் விக்ரமசிங்க ஜனதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி.. அதேபோன்று அதில் அவர் வெற்றிபறுவதும் உறுதி . தேசத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமாட்டார்.

கோத்தாபய ராஜபக்சவினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாமல்போன சந்தர்ப்பத்தில், நாட்டை பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கடிதம் எழுதி நிபந்தனை விதித்து வந்தார். அநுரகுமார திஸாநாயக்க ஒளிந்துகொண்டார். அந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க முன்வந்து வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

அதனால் தேசத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு முன்வந்த ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய வேட்பாளராகவே போட்டியிடஉள்ளார்.. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவது உறுதி . ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைப்பது நிச்சயம் . தற்போதே கட்சிகளில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பலரும் முன்வந்திருக்கிறனர். எதிர்காலத்தில் இன்னும் பலர் எம்முடன் இணையவுள்ளனர் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )