
கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக தமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரச அதிபருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த அரச அதிபர், கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

