ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் பூரண ஆதரவு

ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் பூரண ஆதரவு

செவ்வாய்கிழமை 25.04.2023 வடக்கு, கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.

மற்றைய புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி, இவ் ஹர்த்தாலிற்கு தங்கள் முழு ஆதரவை தெரிவிக்குமாறும் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ் ஹர்த்தாலை முன்னின்று நடத்தும் அத்தனை கட்சிகள், சங்கங்கள் யாவருக்கும் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் தனது சிநேகபூர்வமான நட்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழர்களின் உரிமைகளை பெற்று கொள்ளும் பொருட்டு தமிழ் தேசியம் சார்ந்தோர் இது போன்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் வாழும் உறவுகளை எந்த பாகுபாடுமின்றி இவ் ஹர்த்தாலில் பங்கு கொண்டு சிங்கள பெளத்த அரசிற்கு தமிழர்களின் ஒன்றுபட்ட வெற்றியை காண்பிக்குமாறும் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )