குடாநாட்டில் மீண்டும் கொரோனா? ; யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி

குடாநாட்டில் மீண்டும் கொரோனா? ; யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியார் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கொரோனா சமூகப் பரவல் ஆரம்பித்துள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார்.

நீண்ட நாட்களில் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படும் நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி அமைக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் கொவிட் தொற்றாளர்கள் இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் காய்ச்சல் உள்ளோர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சமூகத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன், கற்பவதிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வெளியே செல்லும்போது முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக இடைவெளியை பேண வேண்டும். சவர்க்காரமிட்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அநாவசியமாக கை குலுக்கல்களை தவிர்க்க வேண்டும். இயன்ற அளவு கூட்டமாக ஒன்று சேர்வதை தவிப்பது சிறந்தது எனவும் வைத்தியார் ஜமுனானந்தா தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட்டால் மீண்டும் ஒரு கொரோனா பேரலை ஏற்படாது தவிர்க்க முடியும். முன்பு போன்ற நிலை ஏற்படாது தவிர்க்க அனைவரும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )