ஊர்காவற்றுறையில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

ஊர்காவற்றுறையில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு

ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து கடற்படையினர் முகாமிட்டுள்ள நிலையில் அக்காணியை கடற்படைக்கு நிரந்தரமாக அபகரிக்க நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

தம்பாட்டி பகுதியில் கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக அமைக்க காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாரந்தனை வடக்கு ஜே/56 தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் பொதுமக்கள் காணியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியை பலவந்தமாக, நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில் நேற்று இரகசியமாக காணி அளவீடு செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த கடற்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )