
அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடா?
அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான எந்தவித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏதேனும் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு சென்றுள்ளதா? சோபா அல்லது எக்ஷா என்ற ஏதேனும் உடன்படிக்கை தொடர்பில் கதைக்கப்படுகின்றதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,
அவ்வாறான உடன்படிக்கை எதுவும் செய்யப்படவில்லை. அப்படி செய்தால் அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்கும் என்றார்.
CATEGORIES செய்திகள்

