
பரந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 கட்சிகள் இடையே நாளை உடன்படிக்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேலும் இணைந்து செயற்பட தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஐந்து கட்சிகள் முன் வந்துள்ளன. மேலும் சில கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புளொட்,ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்.,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் தேசிய கட்சி, ஆகியனவே ஒன்றிணைந்து இந்த பரந்துபட்ட கூட்டமைப்பொன்றை அமைத்து பயணிக்க முன்வந்துள்ளன.
இவ்வாறான நிலையில், இந்த கூட்டமைப்பு தொடர்பில் கட்சிகளுக்கிடையில் உடன்படிக்கை செய்து கொள்ளுமுகமாக தயாரிக்கப்பட்ட நகல்லொன்றை இன்று வெள்ளிக்கிழமை மாலை கூடி இறுதி செய்து நாளை சனிக்கிழமை உடன்படிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பரந்துபட்ட கூட்டமைப்புக்கான செயற்பாடு ஒன்றரை வருடத்துக்கு முன் ஆரம்பானது.
13 வது திருத்தத்தை முமமையாக அமுல்படுத்துமாறு இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்பியது வேளை முதல் இதற்கான பேச்சுகள் நடைபெற்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள புளொட் மற்றும் ரெலோ இந்த பரந்து பட்ட கூட்டமைப்பில் இணைய வருமாறு தமிழரசு கட்சியிடம் கோரியிருந்தன.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி அரசுடான பேச்சுவார்த்தையில் என்ன விடயத்தை வலியுறுத்துவது தொடர்பில் நல்லூரில் தமிழ் கட்சிகள் சந்தித்து பேசிய போது உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் மட்டக்களப்பில் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவினை மேற்கொண்டு அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியே சென்று தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடன், ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கட்சிகள், மேலும் சில கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பரந்து பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு தமிழரசு கட்சியிடம் ரெலோ மற்றும் புளொட் கோரிய போதிலும் பதில் இல்லாத நிலையில் அக்கட்சி தலைவர்கள் சம்பந்தனுக்கு கடிதம் எழுதினர்.இதற்கும் பதில் இல்லாத நிலையில் மேற்படி ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்க தீர்மானித்தனர்.
இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்புக்கான பெயர் மற்றும் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
கட்சிகள் உடன்படிக்கை இவ்விடயத்தை அறிவிக்குமகமான ஊடகவிலாளர் மாநாட்டை ஐந்து கட்சிகள் இணைந்து நடத்தவுள்ளன.

