
எவருடனும் கூட்டு இல்லை முன்னணி தனித்தே போட்டி
கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்ளூராட்சித் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள், மாவீரர்களின் தியாகங்களுக்கு புறம்பாக செயற்படுகின்ற எவரோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது கட்சிகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப் போட்டியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் இழுக்கப் பார்க்கிறார்கள்.
நாம் ஒரு விடயத்தில், உறுதியாக உள்ளோம். கூட்டணி என்ற கதைக்கே இடமில்லை.
அற்ப பதவிகளுக்காக ஒற்றை ஆட்சிக்குள்ளும் 13 ஆவது திருத்தத்திற்குள்ளும் தமிழ் மக்களை முடக்க முனைந்த எவருடனும் கூட்டு வைக்கமாட்டோம்.
எனவே ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை திணிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் சுகாஸ் தெரிவித்தார்.

