5 மாவட்டத்தில் கட்டுப் பணத்தை செலுத்திய தமிழரசுக் கட்சி!

5 மாவட்டத்தில் கட்டுப் பணத்தை செலுத்திய தமிழரசுக் கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி 4 மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கட்டுப் பணத்தை இன்று செலுத்தியுள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தலா 5 சபைகளிற்குமான கட்டுப் பணத்தையும் கிளிநொச்சியில் 3 சபைகளிற்கான கட்டுபணமும் செலுத்தியுள்ள அதே நேரம் திருகோணமலை மாவட்டத்திற்கான கட்டுப் பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமது கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாளையும் நாளை மறுதினமும் தமது கட்டுப் பணத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )