
தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ள பஷில்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அதனால் கட்சி என்ற ரீதியில் நாம் அமோக வெற்றி பெறுவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளுராட்சிசபைகளுக்கான கட்டுப்பணத்தை நேற்று திங்கட்கிழமை கொழும்பு மாவட்ட பிரதேச செயலக காரியாலயத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.பொதுஜன பெரமுனவின் பொருளாதார கொள்கையை நாட்டு மக்கள் புறக்கணிக்கவில்லை.மக்கள் மனங்களில் பொதுஜன பெரமுன தனி இடம் பிடித்துள்ளது. அதனாலேயே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட தயாராக உள்ளோம்.கட்சி என்ற ரீதியில் அமோக வெற்றி பெறுவோம்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக களம் இறங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
அறிவார்ந்த மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள். தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. தேர்தல் நடவடிக்கைகள் இவ்வாரம் முதல் மும்முரமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

