25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி தேர்தலை பிற்போடச் சதியா?

25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி தேர்தலை பிற்போடச் சதியா?

தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி  தனிநபர் சட்டமூலம்  நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அரச தரப்பு எம்.பி.யினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் இறுதித்  துருப்பாக தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும்  தனிநபர் சட்டமூலத்தை பயன்படுத்த அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் அரசுக்கும் எதிர்கட்சிகளுக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில்  கூடிய நிலையில் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி  தனிநபர் சட்டமூலத்தை பொதுஜன பெரமுனவின்   கொழும்பு மாவட்ட எம்.பி. யான பிரேம்நாத் சி தொலவத்த சபையில் சமர்ப்பித்த நிலையிலேயே இத்தர்க்கம் வெடித்தது.

தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி  தனிநபர் சட்டமூலம்  நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

 இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் 6 மாத காலத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை பிற்போட்டு விட்டு,கடந்த நவம்பர் மாதம் அரச தரப்பு எம்.பி.யான தொலவத்த  முன்வைத்த தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி  தனிநபர் சட்டமூல பிரேரணையை நிறைவேற்ற அரசு முயற்சிப்பது முறையற்ற மற்றும் வெறுக்கத்தக்க செயல்பாடாகும்.உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் இறுதி துருப்பாக தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும்  தனிநபர் சட்டமூலத்தை பயன்படுத்த அரசு முயற்சிக்கின்றது  என்றார்.

இதனையடுத்து எழுந்த பிரதமரும் பொதுநிர்வாகம் ,உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,முட்டாள்தனமான விடயங்களை காட்சிப்படுத்தி தவறானவற்றை கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம்..பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரமே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,ஆகவே தறவான விடயங்களை முட்டாளைப்போல் கூற வேண்டாம் என கடுமையாக சாடினார்.

இதன்போது எழுந்த அரச தரப்பு எம்.பி. யான பிரேம்நாத் சி தொலவத்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும்   சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது..எனது தேர்தல் வாக்குறுதியில் 25 சதவீதத்தால் இளைஞர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என உறுதியளித்திருந்தேன்.,ஆகவே பொறுப்பான முறையில் கருத்துக்களை  திர்க்கட்சிகளின் பிரதம கொறடா முன்வைக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்த எழுந்த  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார், பிரிவெனா கல்வி முறைமை தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் நான் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்தேன்,ஆனால் இதுவரை இந்த பிரேரணை பாராளுமன்ற நிலையியல் புத்தகத்தில் உள்வாங்கப்படவில்லை.ஆனால் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் தேர்தலில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் பிரேரணையை நிறைவேற்ற அரசு அவதானம் செலுத்தியுள்ளது,உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசு செயல்படுகிறது என்றார்.

இதனையடுத்து  எழுந்த பாராளுமன்றத்தில் சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.யாக செயல்படும் நிமல் லான்ஸா , தேர்தலை பிற்போடும் நோக்கம் எமது ஜனாதிபதிக்கும் ,அரசுக்கும்  கிடையாது.இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை கொண்டு எதிர்கட்சியினர் தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகின்றனர். என்றார்.

இதுதொடர்பில் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கூறுகையில், உள்ளுராட்சி சபைகளுக்கன தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசுக்கு கிடையாது. அதனால்தான் முதல் கட்சியாக  பொதுஜன பெரமுன  களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தி செலுத்தியுள்ளது என்றார். இவ்வாறான தர்க்கம் அரைமணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )