
ஊழல்வாதிகளுக்கு 2023 ஆபத்தானது; ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை
2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை விரட்டியடிக்கும் என ஜனதா விமுக்தி பெரமுனவின் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி வட்டாரம், வரகாவ பல்லேகமவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த விஜித ஹேரத், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தத் தேர்தலுக்காக மக்களைத் திரட்டி போராடுவோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு சவால் விடுக்கும் அனைவரது சவால்களையும் வெற்றிக்கு எடுத்துச் செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

