யாழ்.நகரிலிருந்து பலாலி விமான நிலையத்துக்கு பேருந்து சேவை

யாழ்.நகரிலிருந்து பலாலி விமான நிலையத்துக்கு பேருந்து சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ்.நகர் – பலாலி இடையிலன போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும் விமானங்கள், 11.50 மணிக்கு சென்னை நோக்கிப் புறப்படும்.

இந்த விமான சேவை பயணிகளுக்காக யாழ்.நகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையம் நோக்கி பேருந்து பேருந்து சேவை இடம்பெறும். அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும். தேவை ஏற்படின் ரயில் நிலையம் வரையிலும் சேவை மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கான ஒரு வழிக் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். பயணப் பொதி ஒன்றுக்கு 200 ரூபா அறவிடப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு யாழ்.மாவட்ட பேருந்து நிலைய பொறுப்பதிகாரியின் 0765378432 இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )