ரணிலை மிரட்டும் ‘மொட்டு’ கட்சி

ரணிலை மிரட்டும் ‘மொட்டு’ கட்சி

தங்களுக்கு 16 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அதனை விரைவில் வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நிபந்தனை. இல்லையேல் அரசாங்கத்தை விட்டு விலகுவார்.

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வருபவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முனைப்பு காட்டும் அதேநேரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கட்சிக்கு 16 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு செய்யாமல் புதிதாக வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கினால், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்துள்ளதால், உடனடியாக அமைச்சரவையை புதிதாக நியமிக்குமாறும், எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முதலில் அமைச்சுப் பதவிகளை வழங்கக் கூடாது எனவும், தங்கள் கட்சிக்கு 16 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதால் பொதுஜன பெரமுனவுக்கே முதலில் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமெனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )