வடக்கில் சீனர்கள் கால்வைக்க தமிழ் கூட்டமைப்பே காரணம்

வடக்கில் சீனர்கள் கால்வைக்க தமிழ் கூட்டமைப்பே காரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் உருவாக்கிய அரசு எனக் கூறிக் கொண்ட அரசின் காலத்தில் சீன நாட்டைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு வழங்கிய கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தைத் தவிர இதுவரையில் சீன நாட்டவர்களால் வேறு எந்தவொரு கடலட்டைப் பண்ணையும் வடக்கில் செயற்படுத்தப்படவில்லை எனத்தெரிவித்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,சீன முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய முதலீட்டாளர்களும் கடலட்டைப் பண்ணைகளை ஆரம்பிக்கும் நோக்கில் தற்போது தம்மை எம்மை அணுகுவதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு மீதான விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த .அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் பேசுகையில்,

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வளங்கள் அடிப்படையில் கடலட்டை உற்பத்தி கிராமங்கள் மற்றும் உற்பத்தித் தொகுதிகள்ரூபவ் கடல் பாசி வளர்ப்பு பாலை,கொடுவா உள்ளிட்ட மீனின வளர்ப்பு,இறால் ,நண்டு வளர்ப்பு போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் வெற்றியளித்து வருகின்ற நிலையில் தாங்களும் செய்யாமல் பிறரையும் செய்ய விடாமல் காலகாலமாக செயற்பட்டு வருகின்ற வெற்று வாய்ப்பேச்சு அரசியல் இதன் பின்னணியில் தவழ்ந்துக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.

போலி தமிழ்த் தேசியத்தின் பேரில் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே தொல்லியல்களாக மீதப்படுத்த விரும்புகின்ற இத்தகைய

சுயலாப அரசியல் கலாசாரமானது எமது மக்களை எந்த வழியிலும் தலைதூக்க விட விரும்புவதில்லை என்ற விடயமே இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

அதே நேரம் வடக்கில் சீனா கால் பதித்து கடலட்டைப் பண்ணைகளை கைப்பற்றிக் கொண்டதாக ஒரு பித்தலாட்ட கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் அரியாலை, பூம்புகார் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் உருவாக்கிய அரசாங்கம் எனக் கூறிக் கொண்ட அரசாங்கத்தின் காலத்தில் சீன நாட்டைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு வழங்கிய கடலட்டை குஞ்சு பொறிக்கும் நிலையத்தைத் தவிர இதுவரையில் சீன நாட்டவர்களால் வேறு எந்தவொரு கடலட்டைப்பண்ணையும் செயற்படுத்தப்படவில்லை.

தற்போது சீன முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய முதலீட்டாளர்களும் கடலட்டைப் பண்ணைகளை ஆரம்பிக்கும் நோக்கில் எம்மை அணுகுகின்றனர். கடலட்டைப் பண்ணைகளை அன்றி கடலட்டை இனப் பெருக்க,கருத்தரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதென்றால் அது குறித்து ஆலோசிக்கலாம் எனஅவர்களிடம் கூறப்பட்டதே தவிர இவர்களில் எவருக்கும் அதற்கான அனுமதியை கடற்றொழில் அமைச்சு இதுவரையில் வழங்கவில்லை என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )