சுமந்திரன்,சாணக்கியன் மீன் விற்கச் செல்லலாம்

சுமந்திரன்,சாணக்கியன் மீன் விற்கச் செல்லலாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான சுமந்திரன்,சாணக்கியன் ஆகியோரை மீன் விற்பதற்கு செல்லுமாறு ஈ .பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு. திலீபன் ஆலோசனை வழங்கினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை 2023 ஆண்டுக்கான வரைவது செலவுத்திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு .சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தின் போதே திலீபன் எம்.பி. இந்த ஆலோசனையை ஆவேசத்துடன் வழங்கினார்.

திலீபன் எம்.பி. உரையாற்றுவதற்கு முதலில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியனுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹர்ஷ டி.சில்வாவுக்குமிடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சாணக்கியன் எம்.பி. உரையாற்றுவதற்கான நேரம் முடிவடைந்ததையடுத்து அடுத்ததாக வன்னிமாவட்ட எம்.பி. திலீபனை உரையாற்றுமாறு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண எம்.பி.அழைத்தார். ஆனால் திலீபன் எம்.பி. பேச முடியாதவாறு சாணக்கியன் எம்.பி. ஒழுங்குப்பிரச்சினைகளை ஏற்படுத்தினார்.

இதனால் திலீபன் எம்.பி.பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சாணக்கியன் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்சினைக்கு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண எம்.பி.இடம் கொடுக்காததால் சுமந்திரன் எம்.பி.யும் சாணக்கியனுக்கு ஆதரவாக கொடுத்தார்.இவ்வாறு சபைக்கு தலைமை தாங்கிய வீரசிங்க வீரசுமண எம்.பி.க்கும் சாணக்கியன். சுமந்திரன் எம்.பி.க்களுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டதனால் தனது உரையை ஆரம்பிப்பதும் பின்னர் நிறுத்துவதுமாக திலீபன் எம்.பி.தடுமாறிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த திலீபன் எம்.பி. ”ஐயோ.. இது என்ன மீன்கடையா,,? தயவு செய்து கத்தாதீர்கள்.மீன்கடையில் கத்துவது போல் கத்துவதென்றால் பேசாமல் இருவரும் மீன் விற்கப்போங்கள் ”என்றார்.

இதன் பின்னர் சுமந்திரன்,சாணக்கியன் எம்.பி.க்களை அமைதிப்படுத்தி திலீபன் எம்.பி.பேசுவதற்கு சபைக்கு தலைமைதாங்கிய வீரசிங்க வீரசுமண எம்.பி. வழியேற்படுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )