
வெடுக்குநாறி மலையில் இந்துக்கள் வழிபடுவதை தடுத்து நிறுத்த வேண்டாம்
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்ற பெயரை மாற்ற வேண்டுமென வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சாரள்ஸ் நிர்மலநாதன்இந்த அமைச்சு மத விவகாரங்கள் கலாசார அலுவல்கள் அமைச்சாக அல்லது புத்த,இந்து கிறிஸ்தவ,முஸ்லிம் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சாக மாற்றப்பட வேண்டுமெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண:டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் புத்தசாசனம்,மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பதிலே பிழை காணப்படுகிறது.இந்த அமைச்சு மத விவகாரங்கள் கலாசார அலுவல்கள் அமைச்சாக குறிப்பிடப்பட வேண்டும் அல்லது மத விவகாரங்கள் என்பதற்கு பதிலாக நாட்டில் உள்ள அனைத்து மதங்களும் அதில் உள்வாங்கப்பட்டு .புத்த,இந்து கிறிஸ்தவ,முஸ்லிம் மத விவகாரங்கள்,கலாசார அலுவல்கள் அமைச்சாக மாற்றப்பட வேண்டும்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இந்துக்கள் ஆரம்ப காலத்தில் இருந்து வழிபாடுகளில் ஈடு பட்டார்கள்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்தது.
ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பகுதியில் தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என தற்போது நீதிமன்றம் அறிவித்துள்ளது,ஆகவே தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.வெடுக்குநாறி மலையில் இந்துக்கள் பாரம்பரிய வழிமுறைகளுக்கு அமைய வழிபாடுகளில் ஈடுப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் குருந்தூர் கோயிலுக்கு அப்பாற்பட்ட காணி விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு வருகின்றேன் இப்பிரதேசத்தில் உள்ள காணிகளில் 5 அல்லது 6 ஏக்கர் காணியை தவிர்த்து ஏனைய காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மற்றும் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ள போதும் மாவட்ட அரச அதிகாரிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.
தொல்பொருள் திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடுகள் பிரச்சினைகளை தீவிரப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன .இனங்களுக்கிடையில் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள்,ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசும் ம் அமைச்சரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

