பாதுகாப்பு துறையினருக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி; இராணுவ பலத்தின் மூலம் ஆளத் திட்டம்

பாதுகாப்பு துறையினருக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி; இராணுவ பலத்தின் மூலம் ஆளத் திட்டம்

வாழ்வதற்கு முடியாது வீதிக் இறங்கவுள்ள போராட்டக்காரர்களை அடக்குவது தொடர்பாகவே வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது போன்றே தெரிகின்றது என்றும், இதற்காகவே பாதுகாப்பு துறையினருக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கடினமான பொருளாதா நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பொருளாதார சக்தியொன்றை அமைப்போம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இதன் போது சமூக பாதுகாப்பு மற்றும் திறந்த பொருளாதாரம் தொடர்பில் கூறுகின்றார். இதில் சமூக பாதுகாப்பு வசனத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சமூக நீதி தொடர்பிலோ, ஊழல், வீண் செலவை எப்படி நிறுத்துவது என்பது தொடர்பில் ஒரு வசனமேனும் ஜனாதிபதி கூறவில்லை.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலகமே கூறுகின்றது. பொருளாதார குற்றவாளிகள் நாட்டில் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் போகிற போக்கில் நாட்டை ஜனாதிபதியிடம் இருந்தே பாதுகாக்க வேண்டியுள்ளது போன்று உள்ளது. ஊழல் மோசடிக்காரர்களை சுற்றி வைத்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

இந்த வரவு செலவுத் திட்டத்தை பார்க்கும் போது வாழ்வதற்கு முடியாது போராடும் போராட்டக்காரர்கள், எதிர்காலத்தில் வீதிக் இறங்கவுள்ள போராட்டக்காரர்களை அடக்குவது தொடர்பாகவே இதில் அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. குறிப்பாக இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படையினருக்கான செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியதாக வீண் செலவுகளை கட்டுப்படுத்தி மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அப்போதே மக்களும் தலைவர் தொடர்பில் புரிந்துகொள்வர். ஆனால் இன்னும் அமைச்சுப் பதவிகளுக்காக வரிசைகள் இருப்பதாக தெரிகின்றது. இன்னும் 8 -10 பேர் அவ்வாறு வர இருப்பதாக தெரிகின்றது. இந்த எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கலாம். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.

தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதியே சிறப்பாக செய்ததாக கூறினார். ஆனால் நாட்டில் வறுமை நிலை 40 வீதமாக அதிகரித்து ள்ளது. மூன்று மடங்கால் அது அதிகரித்துள்ளது. இதன்படி உலகிலேயே இவரே அதிகளவான வறுமயை ஏற்படுத்தியவராக இருந்துள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மனிதாபிமான ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளார்கள் என ஐ.நா கூறுகின்றது.

இந்நிலையில் பணவீக்கம் குறைவடைந்து விட்டது,ஆகவே பொருளாதார பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளோம் என அரசாங்கம் குறிப்பிடுவது வியப்பிற்குரியது.பணவீக்கம் குறைவடைந்தாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடையவில்லை.அரச சேவையாளர்கள்,தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தவில்லை.

நிவாரணம் பெறுவதை மாத்திரம் மக்கள் நோக்கமாக கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு நாட்டு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை செலவுகள் நாளுக்கு நாள் இரட்டிப்பாகியுள்ள நிலையில் மக்களின் மாத வருமானம் முன்னேற்றமடையவில்லை.

காகத்தின் கூட்டில் முட்டையிடும் குயிலுக்கு நேர்ந்த கதியே இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு ஏற்படும்.நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆளும் தரப்பினர் அழுத்தமாக உள்ளார்கள்.இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் என்பது வெறும் பகல் கனவாகும்.

நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.நாட்டு மக்களை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் அரச தலைவர் முதலில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.ஆகவே புதிய மக்கள் ஆணையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலையும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் ஒரே தடவையில் நடத்த முடியும். இதன்மூலம் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )