வெளிநாட்டவர்களுடனான திருமணங்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு !

வெளிநாட்டவர்களுடனான திருமணங்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு !

இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான அனைத்து திருமணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வது தொடர்பான சுற்றறிக்கை இல.18/2021 இரத்து செய்யப்படும் என பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரிடமிருந்து சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த சுகாதார அறிக்கை அவசியம். அத்துடன் வெளிநாட்டுப் பிரஜை எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்பதைக் குறிக்கும் பாதுகாப்பு அனுமதி அறிக்கையும் அவசியம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதார பிரகடனம் மற்றும் பாதுகாப்பு அனுமதி அறிக்கை தொடர்பில் மாற்று செயல்முறைகளை அறிமுகப்படுத்துமாறு பதிவாளர் நாயகம் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி.அபேவர்தன குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்ய விரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு அனுமதி அறிக்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )