தலைமைத்துவ வரிசைக்குள் நாமலை முன்னிறுத்த மகிந்த தீவிர முனைப்பு

தலைமைத்துவ வரிசைக்குள் நாமலை முன்னிறுத்த மகிந்த தீவிர முனைப்பு

ஆளும்பொதுஜனபெரமுன பிளவுபட்டுள்ளதுடன் தென்னிலங்கை அரசியல் அரங்கில் குழப்பமான சூழல் ,ஏற்பட்டுள்ளதாக தென்படுகிறது. கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் செல்வாக்கு குறையும் நிலையில் தனது சிரேஷ்ட புதல்வர் நாமல் ராஜபக்சவை தலைமைத்துவ வரிசையில் அறிமுகப்படுத்துதில் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுன வின் தலைவருமான மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளும் கட்சியில் பெரும்பான்மையினர் விரும்பவில்லை எனவும் அதனால் அரசாங்கத்தை வீழ்ச்சியடையவிடக் கூடாது என்பதில் .பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறப் படு கிறது. இந்நிலையில்கட்சிக்குள் 25 உறுப்பினர்களுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட பசில் ராஜபக்ச அணியானது, எண்ணிக்கையில் உயர்ந்து மீண்டும் ஒரு வலிமைமிக்க சக்தியாகத் திரும்புவதற்கு சாத்தியமில்லை

.’இந்நிலையில்கட்சியின் தலைவரான , மகி ந்த ராஜபக்ச ஏற்கனவே பொதுஜன பெரமுன வுக்கு புத்துயிர் அளிக்க ஒன்றாக எழுச்சி’ என்றகருப்பொருளில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.நாடாளாவியரீ தியில்நடத்தத் திட்டமிட்டுள்ள கூட்டத் தொடரின் மூன்றாவது கூட்டம்கடந்த வாரம் ஆராச்சிக்கட்டுவவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் ..

அக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச ,அடுத்த தேர்தலிலும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் . எவ்வாறாயினும்,இதுவரையிலான மூன்று சந்திப்புகளின் பின்னணியில், நாமல் ராஜபக்சவை தலைமைத்துவ வரிசையில் அறிமுகப்படுத்துவதே என்பது தெளிவாகிறதென குறிப்பிடப்படு கிறது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )