
பசில் மீண்டும் வரமாட்டார் மஹிந்த கூறுகிறார்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராவதற்கோ எந்த நம்பிக்கையும் இல்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் எம்.பி.க்களாக இருக்கக் கூடாது என்ற 22வது திருத்தச் சட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ரம் அவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என்பது 22வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பசில் ராஜபக்ஷ உடனடி யாக இலங்கை திரும்பமாட்டாரெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

