பசில் பிரதமரா?

பசில் பிரதமரா?

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டிலுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமைச்சரவையில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தன்று அவருக்கு பிரதமர் பதவியினை வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )