
பாராளுமன்றம் பஷில் கட்டுப்பாட்டில்
இலங்கை மக்களின் கடும் வெறுப்புக்கும்,சாபத்துக்கும் உரியவராக பஷில் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டுக்குள் பாராளுமன்றம் சென்றுவிட்டது. கோப் குழுவின் தலைமைத்துவம் பஷில் ராஜபக்ஸவின் விசுவாசியிடம் சென்றுவிட்டதால் கோப் குழுவின் செயற்பாடுகள் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹேஷா விதானகே தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த
அவர் மேலும் பேசுகையில்,
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை,ஜனாதிபதி ஒரு வழி,பிரதமர் இன்னொரு வழி என்பதால் திருத்தச் சட்டமூல வரைபு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
இலங்கை மக்களின் கடும் வெறுப்புக்கும்,சாபத்துக்கும் உரியவராக பஷில் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டுக்குள் பாராளுமன்றம் சென்றுவிட்டது என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கோப் குழுவின் தலைமைத்துவம் பஷில் ராஜபக்ஸவின் விசுவாசியிடம் சென்றுவிட்டதால் கோப் குழுவின் செயற்பாடுகள் மீது இனி நம்பிக்கை கொள்ள முடியாது
.அரசாங்கத்தின் தேவைக்கமையவே கோப் குழு இனி செயற்படும்.
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.மாறாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை தனது விசேட உரை ஊடாக தடுத்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும் என அரச தலைவர்கள் குறிப்பிடுகின்றன நிலையில் அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிடுகிறார்.அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் இரட்டை நிலைப்பாடு உள்ளது என்றார்.

