
வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர் , யுவதிகளை அழித்ததுபோல் தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்; சாணக்கியன் எம்.பி.யிடம் பெரமுன எம்.பி. வேண்டுகோள்
வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர் ,யுவதிகளை அழித்ததுபோல் தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்.தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் எம்.பி.யிடம் பொதுஜன பெரமுன எம்.பி அனுப பஸ்குவல் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் யுவதிகளை அடக்குவதற்கு அரசாங்கம் அவர்களை பின்தொடர்கிறது.கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அனுபவிக்குமெனக்கூறிய போதே குறுக்கிட்டு இவ்வாறு வேண்டுகோள் விடுத்த பொதுஜன பெரமுன எம்.பி அனுர பஸ்குவல் மேலும் பேசுகையில்,
மாணவர்களை தூண்டி விடும் வகையில் உரையாற்றி மாணவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.வடக்கில் உசுப்பேற்றும் உரைகளை நிகழ்த்தி அங்கு வைத்துதமிழ் இளைஞர் ,யுவதிகளை அழித்ததுபோல் தற்போது தெற்கில் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்.
தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள்.அதனை விடுத்து மாணவர்களை தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம்.நீங்கள் கல்வி கற்கும் காலத்தில் போராட்டத்தில் ஈடு படவில்லை.
மாணவர்களை சிறைக்கு அனுப்பும் வகையில் நிலைமைகளை தோற்றுவிக்க வேண்டாம்.அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களின் சந்ததியினர் வடக்கில் இதனையே செய்தார்கள் .மாணவர் போராட்டம் என்ற பெயரில் கடந்த காலங்களில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகளே இடம்பெற்றன.எனவே தெற்கிற்கு தீ வைக்காதீர்கள் என்றார்.

