
குருந்தூர்மலை இன்று பிக்குகளுக்கு கையளிப்பு; அமைச்சருக்கு தெரியாமல் நிகழ்வுகள் ஏற்பாடு
நீதிமன்றில் முல்லைத்தீவு குருந்தூர் மலை தொடர்பான வழக்கு உள்ளது.இந்த நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலையில் உள்ள 612 ஏக்கர் காணியை பிக்குகளுக்கும் விகாரைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்;
இந்த விடயம் தொடர்பில் நானும்,நாடளுமன்ற உறுப்பினரர் சாள்சும் துறை சார்ந்த அமைச்சரை சந்தித்து கதைத்தோம்.
காணி அளவீடு தொடர்பில் அமைச்சர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
பின்னர் தொலைபேசி ஊடாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்துக்கு அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு கூறினார்.
இன்று தான் தெரியும் அமைச்சரின் பணிப்புரைக்கு என்ன நடக்கப் போகிறது.இந்த நிலையில் தேசிய சபை ஒன்றை அமைப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை என்றார்.

