
குருந்தூர்மலையில் பணிகளை நிறுத்தமாறு கூறிய ; நீதிமன்ற உத்தரவு உதாசீனம் முடியும் கட்டத்தில் விகாரை!
தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் 19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய கட்டளைகளை உதாசீனம் செய்து கட்டுமானங்கள் தொடர்ந்து இடம்பெற்று விகாரை கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ம் திகதிய கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும்போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் இந்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் 12.06.2022 இல் இருந்தது போலவே தொல்லியற் திணைக்களம் குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கட்டளையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி அங்கு அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி தொடர்ந்து இடம்பெற்று கட்டுமானம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது எனவும் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது