இலங்கைக்கு இனி நிதியுதவி இல்லை; இந்தியா

இலங்கைக்கு இனி நிதியுதவி இல்லை; இந்தியா

சர்வதேச நாணய நிதியத்துடன்  கடன் குறித்த பூர்வாங்க ஒப்பந்ததின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பித்துள்ள நிலையில்,  இலங்கைக்கு இந்த வருடம் சுமார் 4 பில்லியன் டொலர்களுக்கு மேலான நிதியுதவிகளை வழங்கியுள்ள இந்தியா புதிதாக  நிதி ஆதரவை  வழங்குவது குறித்து  திட்டமிடவில்லையென இரண்டு வட்டாரங்கள் ராய்ட்டர் செய்திச் சேவையிடம்  தெரிவித்துள்ளன ,

 மோசமான பொருளாதார நெருக்கடியுடன்  இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு  இந்த வருடம்  மிகப் பாரிய  உதவியை இந்தியா  வழங்கியிருந்தது இருப்பினும் மே மற்றும் ஜூலை மாதங்களில்  இருந்த கடுமையான  நிலைமையை விட  இப்போது குறைவாக உள்ளது.

“நாங்கள் ஏற்கனவே 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான  உதவிகளை வழங்கியுள்ளோம். இப்போது அது சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியதாகும், நாடுகள் தொடர்ந்து உதவி செய்ய முடியாது.”  என்று இலங்கையுடனான கலந்துரையாடல்களை நேரடியாக அறிந்திருந்த இந்திய அரசாங்க வட்டாரமொன்று  ராய்ட்டரிடம் தெரிவித்தது.

அதேசமயம் இந்தியாவின் தீர்மானம் ஆச்சரியமளிக்கவில்லை  என்றும், இன்னும் கொஞ்சம் பெரிய அளவிலான ஆதரவு வரப்போவதாக புதுடில்லி சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு “சமிக்கை ” கொடுத்ததாகவும் இலங்கை அரசாங்க வட்டாரமொன்று  கூறியிருக்கிறது

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் இறுதியில் ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுடன் இலங்கை நடத்த திட்டமிட்டுள்ள உதவி வழங்குவோர் மாநாட்டிற்கு இந்தியாவுக்கு  அழைப்பு விடுக்கப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. 1 பில்லியன் டொலர் பரிமாற்ற ஏற்பாடு தொடர்பாக  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுக்கள் மற்றும் மே மாதம் செய்யப்பட்ட எரிபொருள் கொள்வனவுக்கான இரண்டாவது 500 மில்லியன் டொலர் கடன் அடிப்படையிலான  அதன் கோரிக்கை  முன்னேற்றம் அடையவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின்  மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுடன் பேசுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லாததால், அந்த வட்டாரங்கள் தங்களது பெயரை குறிப்பிடுவதற்கு  மறுத்துவிட்டன

கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்டபோது, இந்தியாவின் நிதி அமைச்சு, இலங்கையின் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவை  கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்திருக்க வில்லை.

உத்தியோகபூர்வமாக கடன் வழங்குபவர்களிடமிருந்து  நிதியுதவி உறுதிமொழிகள் மற்றும் தனிப்பட்ட  கடன் வழங்குனருடனான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் நாடு, கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான பூர்வாங்க உடன்பாட்டை எட்டியது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும், இந்தக் குழப்பத்தில் இருந்து எம்மை நாமே விடுவிப்பதிலும் எமது கவனம் அதிகமாக உள்ளது என இலங்கை வட்டாரங்களிலொன்று கூறியது

இலங்கை தனதுமட்டுப்படுத்தப்பட்ட  அந்நிய செலாவணி இருப்புக்களை எரிபொருள் இறக்குமதிமற்றும் , உரம், சமையல் எரிவாயு , மருந்து உள்ளிட்ட முக்கியமான இறக்குமதிகளுக்காக பலதரப்பு முகவர்களிடமிருந்து நிதியை மீள்  ஒதுக்கீடு செய்யவும் செயற்பட்டுள்ளதாக  ஏனைய இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )