யாழ்., பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

யாழ்., பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபி வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முதல் தேசிய எழுச்சிக்கொடி கட்டப்பட்டு பிரதான தூபியில் மாணவர்களால் அமைக்கப்பெற்ற நினைவாலயத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவனால் பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகை சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்ததோடு மேலும் யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்கள், யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ச்சியாக எதிர்வரும் 26ம் திகதி வரை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )