
இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து கூட்டமைப்புடன் ஆராய்வு; நேற்றிரவு ஜெனீவா புறப்பட்டார் சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நேற்றிரவு ஜெனீவா புறப்பட்டுச் சென்றார்.
பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து சர்வதேச நாடுகளுடன் நாளை மறுத்தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அழைப்பின் பேரில் ஜெனீவா செல்வதாக சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களிலும் சுமந்திரன் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்றில் நாளை வியாழக்கிழமை தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்