தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து ஊர்திப்பவனிக்கு ஏற்பாடு!

தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து ஊர்திப்பவனிக்கு ஏற்பாடு!

1987ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கெதிராக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35வது வருட நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் ஊர்திப் பவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  1. தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணயம் அங்கீகரிகக்கப்பட்ட சமஸ்டி
  2. இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி
  3. வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி
  4. அரசியல்கைதிகளின் விடுதலை
  5. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு
  6. பௌத்தசிங்கள மயமாக்கலை நிறுத்து என்ற தமிழர்களின் அபிலாசைகளை முன்வைத்து ஊர்திப் பவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆரம்பிக்கும் திகதி, மற்றும் இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )