கோத்தாவுக்கு எதிராக 35 வழக்குகள் உள்ளன;  இனி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்

கோத்தாவுக்கு எதிராக 35 வழக்குகள் உள்ளன; இனி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்

“நாட்டை விட்டு ஓடிப்போய் இலங்கைக்கு வந்த கோத்தாபயவுக்கு இப்போது ஜனாதிபதி ஆசை இல்லை, அவர் அமைச்சரும் இல்லை, கட்சியும் இல்லை. இப்போது வெறும் குடிமகன். முன்னர் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையால் நீதிமன்றம் செல்லாமல் இருந்தார். அவருக்கு எதிராக முப்பத்தைந்து வழக்குகள் உள்ளன. தற்போது, ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமை அவருக்கு இல்லை என்பதால் இனி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டாரகம ரைகம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

“கோத்தபாய எதற்காக இலங்கைக்கு வந்தார்? எந்த நாடும் அவரை ஏற்றுக்கொள்ள விரும்பாததால், மாலைதீவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிங்கப்பூர் சென்றார்.அவரால் அங்கு நீண்ட காலம் தங்க முடியவில்லை.பிறகு தாய்லாந்து சென்றார். அங்கிருந்து முன்னாள் நாடான அமெரிக்காவுக்கு செல்ல முயன்றார் அங்கு செல்ல விசா கிடைக்கவில்லை. கடைசியில் யாரும் ஏற்றுக்கொள்ளாததால், அவர் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று.

இது காட்டுவது என்னவென்றால், மக்களிடம் அதிக அதிகாரம் உள்ளது.உலகம் முழுவதும் மக்கள் விரோதிகளாக மாறிய பலருக்கு என்ன நடந்தது என்பதை கோட்டாபய ராஜபக்சவிடமோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவிடமோ கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

நீதிமன்றங்களில் கோத்தபாயவிற்கு எதிராக நிறைய வழக்குகள் இருக்கின்றன. 35 வழக்குகள் இருக்கின்றன. அதில் அலி சப்ரிதான் ஆஜரானார். எனினும் அந்த வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ஆன பிறகு என்ன நடந்தது?ஜனாதிபதிக்கு சிறப்புரிமை உள்ளதனால்தான் ஜனாதிபதியை நீதிமன்றங்களுக்கு கொண்டு வர முடியாது.அதனால் தான் அந்த வழக்குகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தற்போது பழைய வழக்குகளை விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.சட்டத்துறையில் உள்ள அனைவரும் ஒன்று கூடி பழைய வழக்குகளை எடுப்பார்கள் என நம்புகிறோம்.கோத்தபாய எப்படி நீதிமன்றம் சென்று வழக்குகளுக்கு பதில் அளிக்கிறார் என்பதை பார்க்கலாம்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )