இரவோடு இரவாக கோட்டா மீண்டும் நாட்டை வந்தடைந்தார்

இரவோடு இரவாக கோட்டா மீண்டும் நாட்டை வந்தடைந்தார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13 ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜுலை 14 ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி தான் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகரிடம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பின்னர் அவர் ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

மூன்று வாரங்களாக அங்கு தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )