
பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட பெண் துணை விரிவுரையாளர் மலைக் குன்றிலிருந்து தவறி விழுந்து மரணம்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழுவுடன் உத்துமன்கந்த சரதியல் குன்றில் ஏறும் போது வழுக்கி விழுந்து பேராதனைப் பல்கலைககழக விவசாய பீட பெண் துணை விரிவுரையாளர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழு ஒன்று கள ஆய்வுப் பணிகளுக்காக மாவனல்ல உதுமன் கந்த என்ற குன்றுக்கு சென்றுள்ளனர். வரலாற்றில் இடம் பிடித்துள்ள சரதியல் என்ற பொது நலன் கொண்ட கொள்ளைக்காரனான சரதியல் இந்த மலையில் ஒழித்திருந்த காரணத்தால் இதனை சுர சரதியல் கந்த என்று கூறுவர்.
மேற்படி மலைக்கு கல்வி நடவடிக்கைக்காக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் குழு சென்றுள்ளது. அவர்களுடன் 27 வயதுடைய மேற்படி பெண் துணை விரிவுரையாளரும் சென்றுள்ளார்.
இதன் போதே கால் வழுக்கி சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து மேற்படி விரிவுரையாளர் மரணித்துள்ளார்.இவர் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மாவனல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.