
அழுகுரல்கள் கதறல்களுடன் தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
தமிழ் மக்களின் தாயக மண்ணினதும் தமிழ் மக்களதும் விடுதலைக்காகவும் தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வெள்ளிக்கிழமை(27) தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மக்கள் பெரும் உணர்வெழுச்சியுடன் அணி திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்களை விடவும் மிக சி றப்பான முறையிலும் எழுச்சியான வகை யிலும் இம்முறை மாவீரர் நாள் நினைவேந் தல் இடம்பெற்றிருந்தது. வடக்கு கிழக்கில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங் கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினை வாலயங்களில் உணர்வுபூர் வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
நகரங்கள், கிராமங்கள் தோறும் மாவீரர் நினைவிடங்கள் அமைத்து சிவப்பு-மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தலை உணர்வுபூர் வமாக ஒழுங்கமைத்து நடத்தினர்.பிரதான விதிகள், சந்திகள்கூட சிவப்பு மஞ்சள் கொடி களினால் எழுச்சிக் கோலம் பூண்டிருந்தன.
அதேசமயம் வடக்கு கிழக்கு மாகா ணங்களில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பிரத்தியேகமாக ஒழுங்க மைக்கப்பட்டிருந்த இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மக்கள், அணிஅணியாகத் திரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும்,
பிரத்தியேக இடங்களிலும் கூடினர்.
இதனையடுத்து வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ் வுகள் ஆரம்பமான நிலையில் எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு துயிலுமில் லங்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் எழுச்சிக் கோலம் பூண்டிருந்தன. வெள்ளிக் கிழமை மாலை 6.05 மணியளவில், ஆலயங் களில் மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட அகவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர்கள் மாவீரர்க ளின் பெற்றோர்களால் மாவீரர் நினைவிடங் கவில் ஏற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற் றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொது மக்கள், அரசியல்வா திகள் மதத்தலைவர்கள். என பலர் கலந்து கொண்டு, தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர்கள் தூவியும் மலர்மாலைகள் அணிவித்தும் உணவுப் பண்டங்கள் வைத்தும் கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அந்த அஞ்சலிகளால் மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும் அழு குரல்களும் கதறல்களும் நீண்ட நேரம் ஒலித் துக் கொண்டிருந்தன.
தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல்கள் அவர்களின் சொந்த மாகாணங் கள், மாவட்டங்கள் கடந்தும் விதைக்கப் பட்ட நிலையில் வடக்கு மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கிழக்கு மாகாணத்திலி ருந்தும் கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல் லங்களுக்கு வடக்கிலிருந்தும் மாவீரர்களின் குடும்பங்கள் அஞ்சலி செலுத்த வருகை தந்து தமது பிள்ளைகளுக்கு, சகோதர, சகோ தரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேனையாழ்.பல்கலைக்கழகம் மற் றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நான் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக் கப்பட்டது. இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விரிவு ரையாளர்கள், மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் பங்கேற்று மாவீரர்களை நினைவு கூர்ந்து சுட ரேற்றி தமது வணக்கத்தை செலுத்தினர், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது. இம்முறை பொலிஸாரின் கெடுபிடிகள் ஆங்காங்கே இருந்தபோதிலும் மக்களின் எழுச்சியை அவர்களினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே காணப்பட்டது.
1207 போராளிகள் வீரச்சாவு கண்டிருந்த காலத்தில், 1989 ஆண்டில் இந்திய இரா ணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முதலா வது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் திகதி மாவீரர் நாள் நாள் ஆரம் பமாகி நவம்பர் 27ஆம் திகதி வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
2008ஆம் ஆண்டு நடந்த மாவீரர் தினமே விடுதலைப் புலிகளால் பெரும் எடுப்பில் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் தினமாக அமைந்தது. விடுதலைப்புலிகளினால் 2008 ஆம் ஆண்டு இறுதியாக அனுஷ்டிக்கப் பட்ட மாவீரர் நாளில் விடுதலைப்புலிக வின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் எத்தனை சவால்க ளுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந் நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன் ?? என்றுஅ ழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பிற்கிணங்கவே வருடம் தோறும் நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் நாள் தமிழர் தாயகப் பிரதேசங்களில் மட்டுமன்றி அவர் கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தொடர்ந்தும் அனுஷ்டிக்கப்பட்டு வருகி றது.அந்தவகையில் இந்தவருடமும் மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மிக வும் உணர்வு பூர்வமாகவும் எழுச்சியாகவும் அனுஸ்டிக்கப்பட்டன.




















