ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பாரிய மோசடி – அம்பலப்படுத்தியுள்ள அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த காலத்தில், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 96.22 மில்லியன் ரூபாய் நிலுவை தொகை இதுவரை செலுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக் குத்தகை விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில பயணங்களுக்காக இந்த தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ், பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அத்துடன் லலித் வீரதுங்க, ஷிரந்தி ராஜபக்ச, யோஷித ராஜபக்ச ஆகியோரும் அடங்கிய குழுக்கள், 2014 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கே இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளது.
பாரிய மோசடி
2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணங்கள் குறித்து, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, வரவு-செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு பாரிய மோசடி – அம்பலப்படுத்தியுள்ள அநுர அரசு | Mahinda Cheated On Sri Lankan Arilines
2014 ஆம் ஆண்டில் ஷிரந்தி ராஜபக்ஷ, ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன, லலித் வீரதுங்க உள்ளிட்ட 59 பேர் மாலைத்தீவு மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து செலுத்த வேண்டிய 20.35 மில்லியன் ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை.
2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஷிரந்தி ராஜபக்ச, ஜி.எல். பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன, பீலிக்ஸ் பெரேரா உள்ளிட்ட 70 பேர் இத்தாலி பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதற்கான ரூபா 43.47 மில்லியன் இதுவரை செலுத்தப்படவில்லை.
அத்துடன், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 43 பேருடன் நேபாளத்திற்குச் சென்றதற்காக ரூபா 28.8 மில்லியனும், 2014 இல் மகிந்த ராஜபக்ச, யோஷித ராஜபக்ச உள்ளிட்ட 57 பேர் திருப்பதி சென்றதற்காக ரூபா 3.6 மில்லியனும் இதுவரை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் நட்டமடைவதற்கு இத்தகைய கொடுப்பனவுச் செலுத்தப்படாமைகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.