வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டிவீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. பிரதான ஈகைசுடரினை மாவீரர்களின் தாயாரான செபஸ்தியாம்பிள்ளை புஸ்பவதி அம்மையார் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன்,சட்டத்தரணி காண்டீபன், கட்சியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் உட்பட பெருமளவான பொதுமக்கள், கலந்துகொண்டிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )