தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அமைச்சரின் நேரடிக் கோரிக்கை

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அமைச்சரின் நேரடிக் கோரிக்கை

முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகளும் படகுகளும் சேதப்படுத்தப்படுவது தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகள் மற்றும் படகுகளை மாத்திரமன்றி, நாட்டின் கடல் வளங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் இந்திய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசாங்கத்திற்கே உள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அமைச்சரின் நேரடிக் கோரிக்கை | Sri Lanka Warns Indian Fishermen Illegal Fishing

மேலும், தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்த அவர், திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததைப் போன்று, இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கும் தீர்வுகாண முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒருசில மீன் வியாபாரிகள் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொப்புள்கொடி உறவு

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் நிலையில், ‘தொப்புள்கொடி உறவு’ என்ற உறவுமுறைப் பேச்சு அர்த்தமற்றதாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படையை மேலும் பலப்படுத்தவும், இதற்கெனத் தனியான பிரிவொன்றை உருவாக்கவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை அமைச்சரின் நேரடிக் கோரிக்கை | Sri Lanka Warns Indian Fishermen Illegal Fishing

எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்தியப் படகுகள் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

இந்திய இழுவைப் படகு உரிமையாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிய அமைச்சர், வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இச்செயற்பாடுகளுக்கு எதிராகத் தங்களால் இயன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )