செம்மணியில் மீட்கப்பட்ட 583 எலும்புக் கூடுகளில் 63% குழந்தைகளுடையவை

செம்மணியில் மீட்கப்பட்ட 583 எலும்புக் கூடுகளில் 63% குழந்தைகளுடையவை

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் அதிகம் மீட்கப்பட்டது குழந்தைகளின் என்புகூடுகளே என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்ககால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்று வரும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இதுவரை 583 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 நாட்கள் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது மீட்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் சுருக்கமான விளக்கத்தையும் பகுப்பாய்வையும் குறித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் என்புக்கூடுகள் 41 சதவீதமும், கைக்குழந்தைகளின் என்புக்கூடுகள் 22 சதவீதமும், இளையவர்களின் என்புக்கூடுகள் 5 சதவீதமும், வயது வந்தோரின் என்புக்கூடுகள் 30 சதவீதமும் இவ்வாறு என்புக்கூடுகளாக மீட்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )