கிராமத்திற்கு கிராமம் கூட்டங்கள்;  நாமல் இன்றி களம் இறங்குகிறது கட்சி

கிராமத்திற்கு கிராமம் கூட்டங்கள்;  நாமல் இன்றி களம் இறங்குகிறது கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமத்திற்கு கிராமம் என்ற தொகுதி கூட்டங்களை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டிருந்த போது, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பாராளுமன்ற உறுப்பனர் டீ.வி. சானக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சானக்க மாதுகொட ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பலத்த எதிர்ப்புகள் உருவாகி வருவதாகவும், இதனால் இந்த அரசாங்கம் அடக்குமுறையின் ஊடாகவே நாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கிராமம் கிராமமாகச் சென்று இந்த அரசாங்கத்தின் தோல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிராமங்களில் கூட்டங்களை விரைவாக நடத்துமாறு தொகுதி அமைப்பாளர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இதன்படி அடுத்த வாரம் முதல் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )