தியாக தீபத்தின் விடயத்தில் முட்டி மோதிக்கொள்ளும் தமிழர் தரப்புக்கள்! விடுக்கப்பட்ட கோரிக்கை

தியாக தீபத்தின் விடயத்தில் முட்டி மோதிக்கொள்ளும் தமிழர் தரப்புக்கள்! விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழினம் இறைவனாக மதித்து போற்றுகின்ற திலீபனை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான ந. பொன்ராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலை அகற்றிய விடயத்தில் தமிழரசுக் கட்சிக்கு தொடர்பிருப்பதாக இன்று காலை முதல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டி வருகின்றது.

சிங்களத் தரப்பு

ஆனால், இன்று மாலை யாழ். மாநகர முதல்வர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியதுடன், சிலை வைப்பதற்கு தற்காலிக அனுமதியே கோரப்பட்டதாகவும் அதற்கு சபை அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

தியாக தீபத்தின் விடயத்தில் முட்டி மோதிக்கொள்ளும் தமிழர் தரப்புக்கள்! விடுக்கப்பட்ட கோரிக்கை | Thileepan Statue Issue Request

சிலை அகற்றப்பட வேண்டும் என சிங்களத் தரப்பும் தமிழின கோடரிக்காம்புகள் சிலரும் ஒன்றுபட்டு நிற்கின்ற நிலையில், தமிழ்த்தேசியத் தரப்புகள் தங்களுக்குள் முட்டி மோதுவதானது ஆரோக்கியமானதல்ல.

இந்த செயற்பாடானது எதிர்காலத்தில் எந்த நினைவேந்தல்களையும் செய்யமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் தமிழினத்தை தள்ளிவிடும். அரசியல் ரீதியாக தற்போது கிடைத்திருக்கும் சிறு இடைவெளியை பயன்படுத்தி தமிழினத்திற்காக உயிர்நீத்தவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே இப்போதுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய, பெரும் பணி ஆகும்.

இதனை விடுத்து, திலீபனினதும், மாவீரர்களினதும் தியாகத்தை வைத்து அரசியல் செய்வதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் தரப்பின் அரசியல் போட்டி காரணமாக நினைவேந்தல்களுக்கு மக்கள் பங்குபற்றுவதே குறைந்து செல்கின்றது.

கடந்த காலங்களில் திலீபனின் நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் எண்ணிக்கையையையும் இந்த வருடம் கலந்துகொண்ட மக்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் இந்த உண்மை தெரியவரும்.

தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளின் பிரசன்னமும் ஒத்துழைப்பும் இன்றி எந்த நினைவேந்தலையும் செய்ய முடியாது என்பதையும் மறுக்கமுடியாது” என்றார். 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )