யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி!

யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் வெண்கல சிலையை காவல்துறையினர் பெயர்த்து எடுத்து சென்றுள்ள நிலையில், சிலையின் இருப்பிடத்திற்கு மலர் மாலை வைக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபத்தின் நினைவாலய பகுதியில் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி வெண்கல சிலை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 12 நாட்களும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று (26)  இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

மலர் மாலை வைத்து அஞ்சலி 

இந்நிலையில் (27)  நினைவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர், இரண்டு காவல்துறை வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி! | Police Remove Thileepan S Statue From Nallur

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த இடத்தில் ”நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலை சிங்கள, பௌத்த இனவாத அனுர அரசால் அகற்றப்பட்டமைக்கு வன்மையான கண்டனங்கள்” என்று குறிப்பிடப்பட்ட பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நினைவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு மலர் மாலை வைத்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நல்லூரில் திலீபன் நினைவிடத்தில் சிலையின்றி தொடரும் அஞ்சலி! | Police Remove Thileepan S Statue From Nallur
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )