முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம் – முதல்வர் விஜய் உருக்கம்

முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம் – முதல்வர் விஜய் உருக்கம்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” என முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. போரின் இறுதி நாட்களில், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர் நடத்தப்படாத இடம் எனக்கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தஞ்சம் அடைந்தனர்.

முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம் - முதல்வர் விஜய் உருக்கம் | Cm Vijay Post About Mullivaikkal Remembrance Day

ஆனால் அங்கிருந்த அப்பாவி மக்கள் மீது வான் வழி, தரைவழி மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.இந்த போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போரினால் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள் பலரும் இந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.அந்தவகையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் (மே 18) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )