கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று கொழும்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்நினைவேந்தல் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும் சில இனவாத போக்குடையோர் மற்றும் சிங்கள ராவய அமைப்பினரும், குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதன்போது குறித்த தரப்பினர் பாதுகாப்பு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு இனவாத கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், இந்நிகழ்வின் போது எதிர்ப்பினை வெளியிட்டு வரும் ஒரு நபர், கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு வருவதுடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )