
விசேட பலத்துடன் இருக்கின்றோம்; எந்த சவாலுக்கும் அஞ்சோம் எம்மை வீழ்த்தவே முடியாது; எதிர்க்கட்சிகளின் முயற்சி ஒருபோதும் பலிக்காது
சவால்களை கண்டு பின்வாங்கும் அரசியல் இயக்கமல்ல நாங்கள். எந்த சவால்களுக்கும் முகம்கொடுத்து பயணிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது. இதனால் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கக்கூடாது என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் ஏப்ரல் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரசாங்கத்தை அமைத்துள்ளோம். வரலாற்றில் முதற்தடவையாக முழு நாடும் ஒன்றிணைந்து அமைத்த அரசாங்கமாகும். இதனால் இது விசேட பலத்தை கொண்ட அரசாங்கமாக இருக்கின்றது. இருந்த முறைமைகளை மாற்றி புதிய மாற்றங்களை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த மாற்றங்களை இலகுவில் செய்ய முடியாது. இதற்காக சில காலங்கள் எடுக்கும். ஒரு வருடத்தில் வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு நிவாரணங்களை கொடுத்தோம். ஆனால் சமூகத்தை மாற்றுவதில் சிறிது காலம் எடுக்கும். சீனா, சிங்கபூர் போன்ற நாடுகள் தமது நாடுகளை கட்டியெழுப்ப சிறிது காலம் எடுத்தது. இதன்படி இங்கும் மாற்றங்களை ஏற்படுத்த சிறிது காலம் எடுக்கும். எவ்வாறான இடையூறுகள் வந்தாலும் சிறந்த சமூகத்தை உருவாக்கவென உறுதிமொழியுடன் வந்துள்ளோம். இது ஐந்து வருடத்தில் நடக்கப் போவதில்லை. தொடர்ந்தும் இதனை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
சில மாற்றங்களை நாங்கள் முன்பள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. சிலர் பழக்கத்தில் ஒருபோதும் மாற்றத்திற்கு வரமாட்டார்கள். இதனை ஒரே இரவில் செய்ய முடியாது. பழக்கத்தில் வர சிறிது காலம் எடுக்கும்.
இப்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமையில் எரிபொருள் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதன்போது சிலர் பொதுநிலையில் சிந்திக்காமல் தமக்காக எரிபொருளை சேமித்துக்கொண்டார்கள். இவ்வாறான சமூகத்தில் இதுபோன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அரசாங்கம் மேல்மட்ட திருட்டுகளை நிறுத்தினாலும் கீழ் மட்டத்தில் அவை நடக்கின்றனதானே. அவற்றை நிறுத்த வேண்டும்.
இதேவேளை நாங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்க முடியாது. எதிர்பாராத விடயங்கள் நடக்கலாம். அண்மையில் டித்வா புயல் வந்தது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் மக்களை கூடிய விரைவில் வழமையாக வாழ்க்கைக்கு கொண்டு வந்தோம். இப்போது புதிய பிரச்சினையாக மத்தியக் கிழக்கு யுத்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்று கூற முடியாமல் இருக்கின்றது. இது தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். இது அரசாங்கத்தினால் ஏற்படும் பிரச்சினை அல்ல.
அத்துடன் எமது நாட்டில் உள்ளதை போன்ற எதிர்க்கட்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை. ஜனநாயக ரீதியிலேயே அதிகாரங்களை பெற வேண்டும். ஆனால் இவர்களுக்கு பொறுமை இல்லை. மக்களிடம் போவதும் இல்லை. ஏதாவது பிரச்சினையால் அரசாங்கம் விழும் அப்போது கைப்பற்றலாம் என்று நினைக்கின்றனர். முதலில் டிசம்பரில் கைப்பற்றுவோம் என்பர், பின்னர் ஏப்பரலில் கைப்பற்றுவர் என்பர். நாங்கள் அவ்வாறு அரசாங்கத்தை பெறவில்லை. கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டே செய்தோம். அனால் இந்த எதிர்க்கட்சி யுத்தம் அதிகரித்து, இங்கு எரிபொருள் இல்லாமலாகியாவது நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு ஆட்சியை பெறலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் அரசாங்கத்தை கவிழ்க்க வீதிக்கு இறங்குவர் என்றும் எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். ஆனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தை பாதுகாக்கவே வீதிக்கு இறங்குவர் என்றே நாங்கள் நம்புவோம்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தே எங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. பொறுத்துக்கொள்ளும். தைரியம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருக்கின்றனர். இதனால் இவர்களின் சூழ்ச்சிகளுக்கு முகம்கொடுப்பது எங்களுக்கு கஸ்டமாக இருக்காது. எதிர்க்கட்சியினர் தொடர்பில் ஆச்சரியமடையத் தேவையில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைக்கூட ஆட்சிக்காக பயன்படுத்தினர். இப்போது உண்மையான சூத்திரதாரிகளை முன்னால் வைத்துக்கொண்டு புத்தகத்தை வெளியிடுகின்றனர்.
எவ்வாறாயினும் நாங்கள் இதுபோன்ற சவால்களுக்கு மத்தியில் புதிய சமூகத்தை உருவாக்கும் பயணத்தை முன்னெடுக்கின்றோம். இந்த நடவடிக்கைகளை இறுதி வரையில் முன்னெடுத்துச் செல்லும் பலம் எங்களிடம் இருக்கின்றது. சவால்களுக்கு முன்னால் நிற்கும் அரசியல் இயக்கமல்ல இது. சவால்கள் மூலம் எங்களை பயணத்தை தடுக்க முடியாது. குற்றங்களை சுமத்தி எங்களை வீழ்த்த முடியாது. எதிர்க்கட்சியில் உள்ள சிலர் எங்கள் மீது குற்றங்களை சுமத்தி எங்களை பயணத்தை நிறுத்தலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ‘சொறி’தான் சொல்ல வேண்டும். 1977இலிருந்து எங்களை பற்றி எந்தளவுக்கு பொய்களை கூறினர். அந்த பொய்களை சிலர் நம்பினர். எவ்வாறாயினும் குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்கள் மூலம் அரசியலை தோற்கடிக்க முடியாது. 1977 காலத்தில் மக்களை கொன்றும் எங்கள் பயணத்தை நிறுத்த முடியவில்லை. இவ்வாறான நிலைமையில் குற்றச்சாட்டுகள் மூலம் எங்களை வீழ்த்த முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றார்.

